Thursday, 24 March 2016

#################################################################################

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!

இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்

இழந்தது எவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்

கோலம் மாறி  அழகையும் இழந்தேன்

காதலித்து அவளிடம் இதயம் இழந்தேன்

காணாமல் போனாளே அவளை இழந்தேன்

வயதாக ஆக உடல் நலம் இழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம் இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் இறைவன்

”கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"

"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"

"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"

"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்

இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

இறைவன் மறைந்தான்.

#############################################################################
Pudhu Vidiyalai thedi naan alaigiren
Intha vanathin thodakatthai kaan ninaikiren
Boomiyin mudivai parka marukiren
Intha uravin kanavugalai thooki nadakiren
Pudhu Vidiyalai thedi naan alaigiren


Pudhu Vidiyalai thedi naan alaigiren
Vayalgalin uyirottathai thazhuva muyalgiren
Pasumaiyana pulveligalai thottu paarkiren
Kaatrin  Isaiodu otti uravada ninaikiren
Malaragalin vaasathai mugarnthu nirkiren
Pudhu Vidiyalai thedi naan alaigiren


Pudhu Vidiyalai thedi naan alaigiren
Anbu niraintha makkalai thedinen
Atharavana pillaigalai vendum endrenninen
Paasamana petrorgalai vida evvulagil verathum illaiendren
Ivai anaithum nadakuma endru yenginen
Anaithum nadanthathu avalai paartha modhal Nodiyil
Pudhu Vidiyal en vazhi thaanai vanthathai unarthen

#################################################################################
கலவரம் … கல் வரம் … கால வரம்

ஒரு உயிருக்காக போராடினேன்ஆனது கலவரம்
இரு உயிராக வாழ கிடைத்ததுஎனக்கு கல் வரம்
இருயிரோடு இருயிர் வாழஆனந்தமாய் பெற்றேன் கால வரம

#################################################################################

பார்த்த முதல்நொடியில்
—---------------------
உதடுகள் ரெண்டும் பர பறந்தது ஏன்என்று தெரியவில்லை
கண்கள் ரெண்டும் சிலு சிலுதது ஏன்என்று நினைக்கவில்லை
கன்னம் ரெண்டும் பட படததது ஏன்என்று புரியவில்லை
காது ரெண்டும் வெட வெடத்தது ஏன்என்று கேட்க முடியவில்லை

புஜங்கள் ரெண்டும் நடு நடுங்கியதுஏன் என்று நிமுற முடியவில்லை
மார்பகங்கள் ரெண்டும் குறுகதோன்றியது ஏன் என்று உணரமுடியவில்லை
கைகள் ரெண்டும் துடி துடித்தது ஏன்என்று ஒரு கணம் அறியவில்லை
கால்கள் ரெண்டும் ஓடதோன்றியதுஏன் என்று கவனிக்க நேரமில்லை

சிரிக்க முடியவில்லை
அழ முடியவில்லை
பசிக்க தோன்றவில்லை
பேச நினக்கவில்லை

இந்த உலகம் என் காலடியில்
எல்லாம் அந்த ஒரு நிமிடம்
மிருதுவாக தொட்டது, சிணுங்கியது
என் குழந்தை என்னை பார்த்த முதல்நொடியில்

#################################################################################
ஏழாம் முறை …

இவ்வுலகிற்கு வந்ததும் பார்த்த முதல் பெண்ணே
அம்மா என்று அழைக்கும் பொது நினைத்தேன் முதல் முறை

கால்கள் ரெண்டும் பதித்து நடக்க உதவிய பெண்ணே
அரவணைத்தாய் கீழே விழும்போது நினைத்தேன் இரண்டாம் முறை

கை கூட்டி கணக்கு படிக்க சொல்லி கொடுத்த பெண்ணே
பரிட்சையில் பெயில் ஆனாலும் அன்பு காட்டினாயே நினைத்தேன் மூன்றாம் முறை

கல்லூரியில் ஆனந்தமாய் என்னுடன் பழகிய அன்பு பெண்ணே
காதலாகி கல்யாணம் செய்து கொண்டாயே நினைத்தேன் நான்காம் முறை

வாழ்கையில் வெற்றி பெற என்ன செய்யலாம் என்று நினைக்கவெய்த்த பெண்ணே
வணிகம் செய்து வெற்றி பெற உறுதுணையானாய் நினைத்தேன் ஐந்தாம் முறை

நாம் இருவரும் வாழ நமக்கு இரு துணை பெற்ற அன்பு பெண்ணே
நட்பன்புகளோடு வழிமுறைகளையும் கற்றுகொடுதாயே நினைத்தேன் ஆறாம் முறை

வயது ஆனாலும் என்னோடு வாழ்நாள் வரை வர துடித்த பெண்ணே
உன்னகாக நான் என்ன செய்தேன் என்று நினைத்தேன் ஏலாம் முறை

கடவுள் படைத்தானே உன்னை
எங்களிடம் சேர்த்தானே கண்ணை
மனம் உருக வைத்தானே என்னை
கடவுள் வேறில்லை என்று காட்டினானே பெண்ணை

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

அன்பு கவிஞர்
கணேஷ்
#################################################################################
ஜெயிப்போம் நாம் …

காலை எழுந்ததும் பேஸ்ட் தேடினேன் கிடைக்கவில்லை

ஒரு கப் காபீக்கு நின்று கொண்டிருந்தேன் கொடுக்கவில்லை

இன்றாவது காலை உணவு சாப்பிடலாம் என்றால் காசுஇல்லை

வேலை தேடுவதற்கு தயாராக உடுத்திக்கொள்ள நல்ல சட்டையில்லை

தெய்வத்தை வணங்க போனேன் பூஜை நடந்ததால்  பார்க்கமுடியவில்லை

வழக்கமாக பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன் பஸ் வரவில்லை

வேலைக்கு சென்ற இடத்தில கூட்டத்தில் நிற்க முடியவில்லை

இன்றாவது வேலை கிடைக்குமா என்று கூட எண்ண முடியவில்லை

பசி பட்டினி
ஏக்கம் ஏமாற்றம்
கடன் கவலை

ஏன் இல்லை நம்மிடம் நம்பிக்கை
மீன்றும் எழுந்து வர வேண்டும் தும்பிக்கை

பட்டது போதும் இவ் வாழ்வில்
சந்தோசம் பொங்கட்டும் இன் நாளில்

இதுவரை படித்தது போதாது நமக்கு
மேலும் கற்றுகொல்வதே நம் இலக்கு

போதும் என்று எண்ணுவோம்
ஜெயிப்போம் என்று நம்புவோம்

அன்பு கவி
கணேஷ்
#################################################################################
சரி , தவறு இந்த இரண்டிற்கும் இடையே உள்ள கோட்பாடு உலகம் முழுக்க ஒன்றுதான்..
தான் நினைப்பது , செய்வது எல்லாமே சரி ..
அதுவே, மற்றவர்கள் நினைப்பது , செய்வது எல்லாமே தவறு  ..
#################################################################################

சிரிப்பின் சிறப்பு ...

முதன் முறையாக அப்பாவாக ஆஸ்பத்திரியில் குழந்தையை வாங்கிய போது தந்தையின் சிரிப்பு

ருசியான சாப்பாட்டை தானே முழுவதுமாக வயிறு முட்ட உன்ற போது தாயின் சிரிப்பு

தான் கேட்ட பார்பி பொம்மை பிறந்த நாள்  பரிசாக கிடைத்த போது மகளின் சிரிப்பு

பைக்கில்  குழந்தை உட்காரவைத்து  தந்தை உலா வந்த போது மகனின்  சிரிப்பு

பத்து வருடம் ஆனாலும் சுரிதார் பிறந்த நாளன்று கொடுத்த போது காதலியின் சிரிப்பு

எத்தனை கூட்டம் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் கிடைத்த முத்தம் காதலனின் சிரிப்பு

வயதான காலத்தில் பூங்காவில் கைகோர்த்து நடக்கும் போது வயோதிகனின் சிரிப்பு

பலநூறு பேர் கூடியிருந்த நேர்முக தேர்வில் வாங்கிய பணி கடிதம் இளஞனின் சிரிப்பு

மாணவர்கள் பல மாதங்களாக படித்து எழுதிய பரிட்சையில் வெற்றி மாணவனின் சிரிப்பு

எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருந்தது நண்பர்கள் கூறிய நிமிடம்
கவிஞனின் சிரிப்பு

தன்னுடைய படம் நூறு நாள் வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பது நடிகனின் சிரிப்பு


இதுதான்  பலபேரின் சிரிப்பு
வாழ்கையில் ஏற்படும் இனிப்பு
இதுவே என்றைக்கும் சிறப்பு

அன்பு கவி
கணேஷ்
################################################################################
மழை பெய்வாயா …

தூங்கு கண்ணே தூங்கு

நீ ஓடி யாடி விளையாட வாங்குவோம்ஒரு பொம்மை

வீட்டில் இருந்துகொண்டே உலகவரலாற்றை தெரிந்துகொள்ளதொலைக்காட்சி

படிப்பதற்காக பக்கத்துக்கு ஊருக்குசெல்ல நல்லதாய் மிதிவண்டி

கல்லூரியில் உன்னுடைய ஆசிரியைகாண வருவதற்கு நல்ல புடவை

நம் வயக்காட்டில் முழுவதுமாய் கற்கள்சந்தோசமாக ஓடியாட காலணிகள்

நாத்து நட்டு விவசாயம் பார்த்துஅறுவடை செய்து நகரத்துக்கு விற்கஎடுத்துசெல்ல டிவிஎஸ்50

நமது உறவினர்களோடு அன்பைபகிர்ந்துகொள்ள நாமும்வாங்குவோம் ஒரு மொபைல் போன்

தூங்கு கண்ணே தூங்கு

இறைவா
எங்கள் மீதும் கொஞ்சம் கருணைகாட்டேன்
ஏக்கங்களோடு கேட்கிறேன்

இன்றாவது மழை பெய்வாயா

அன்பு கவி
கணேஷ்
#################################################################################
காரம் ...

ஹோட்டலில் இரவு சாப்பாட்டில் சுவை சரியில்லை எடுத்துரைத்தது
வார்த்தையில் காரம்

தியேட்டரில் டிக்கெட் வாங்க கியுவில் திடிரென ஒருவன் நுழைய முனைந்த போது
கூட்டத்தின் கூச்சல் காரம்

ஆட்டோ பயணம் முடிவாகி வீட்டின் முன் நூறு ரூபாய்க்கு சில்லறை பத்தாமல்
வீண் விவாதம் காரம்

துணிக்கடையில் ஒரு சேலைக்கு நான்கு மணி நேரம் கடைகாரனின் மனதிற்குள்
முனங்கல் காரம்

பள்ளியின் முழு இறுதிக்கு அணைத்து பாடங்கள் படிக்க முடியாமல் திணறி
திட்டு வாங்குவது காரம்

அவசரமாக அலுவலுகத்துக்கு செல்கையில் வேகமாய் மோதிய பைக் ஓட்டுனரிடம்
சூடான மோதல் காரம்

அணைத்து ஆவணங்கள் இருந்தும் பணம் வசூலித்தாக வேண்டிய கட்டாயத்தில்
காவல் அதிகாரியிடம் சினுங்கல் காரம்

கல்யாணம் ஆகி மூன்று மாதங்களே ஆன மனைவியிடம் உப்பு பத்தவில்லை
என்று உரையாடல் காரம்

மாதம் ஒருமுறை வாடகை பத்தாது வீட்டு முதலாளியிடம் வாங்கும் திட்டல்
எப்பொழுதும் காரம்

காரம் எதுவாயினும் ஆகட்டும்
இனிப்பான வார்த்தைகளே சிறக்கட்டும்
அமைதியான வாழ்கை கலக்கட்டும்

அன்பு கவி
கணேஷ்

#################################################################################
தெறிக்க …

வாழ்க்கையில் வெற்றி பெற உறுதிமொழி எடுக்க வேண்டும் உரக்க

பழைய நினைவுகளை அடியோடு குப்பையில் இடவேண்டும் மறக்க

ஓயாது உழைக்க வேண்டும் வாழ்வின் உச்சியில் பறக்க

மற்றவர்கள் நம்மை பார்த்து பிரமிக்க வைக்கவேண்டும் வெடிக்க

தன்னம்பிக்கையோடு நடக்க வேண்டும் மெய் சிலுர்க்க

ஆஹா வென்று விட்டோம் என்று மார் தட்டுவோம் கணக்க

தலைமுறைகள் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் கலக்க

எத்துனை முறை பிறந்தாலும் வாழ்ந்து காட்டுவோம் தெறிக்க

அன்பு கவி
கணேஷ்
#################################################################################
சினிமா காதல் ...

பார்த்து மயங்க உன்கண்கள் தானே மீனா
ரொம்ப நாலா பின்னாடி வந்தேன் போடதே சீனா

உன்னோட தோளு கலரு எப்பவுமே நக்மா
ஆனா நான் போடமாட்டேன் ரம்மா

நீ தான் என்னோட ஹன்சிகா
நான் வாங்கி கொடுத்ததெல்லாம் பான்சிகா

உன்னோட வாய்ஸ் கேட்கலாம் டிடி
உன் கிட்டே சொல்வேனா சரி தான் போடி

ரொம்ப அழகா இருக்கே நீ ரம்யா
ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாம் கம்யா

இவ்வளவு உயரமா இருக்கியே நமீதா
எங்கப்பா கிட்டே சொன்னேன் வீட்ல தகதிமிதா

எடுத்து தரேன் சாரி சென்னை சில்க்ஸ் காஜல்
கல்யாணம் பண்ணிட்டு ஆடுவோம் சும்மா ஜல்ஜல்

குழந்தை ரெண்டு பெத்துக்குவோம் அழகான கீர்த்தி
நான் எப்பவுமே நம்ம காருக்கு உங்களோட சாரதி

அன்பு கவி
கணேஷ்
#################################################################################
பட்டம் ...

சிறுவயதில் சொல்லிகொடுத்த பாடத்தை பரிட்சையில்
நூறு மதிப்பெண் பெற்றதால் செல்ல பிள்ளை

கல்லூரி படிப்பை அர்ரியர்ஸ் இல்லாமல் 75 சதவிகிதம்
மேல் வாங்கியதால் அன்பான பிள்ளை

எப்பொழுதும் சுற்றி இருந்த நண்பர்களை சந்தோஷமாக வைத்துகொள்ள
நகைசுவையொடு பேசுவதால் விளையாட்டு பிள்ளை

வேலையில் தன்னுடைய சக தொழிலாலிய விட மேம்பட
சிறப்பாக செய்ததால் திறமையான பிள்ளை

சிறுவயதிலிருந்தே பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் காந்த கண்களால்
காதல் வயப்பட்டேன் மன்மத பிள்ளை

காதலித்த பெண்ணை மணமுடித்து சிக்கனமாய் வாழ்ந்து
ஒரு வீடு கட்டியதால் குடும்ப பிள்ளை

பெற்ற குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்கவைத்து ஆளாக்க
தன்ரத்தத்தை சிந்துயதால் பொறுப்பான பிள்ளை

பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளை மடி மீது தாலாட்டி
தூங்க வைத்ததால் வயதான பிள்ளை

எல்லாவற்றிற்கும் மற்றவர்களை திருப்தி படுத்த
ஓயாமல் உழைத்தால் பெற்றேன் சிறந்த பிள்ளை

இப்படி பெற்றேன் பிள்ளை பட்டம்
இதனால் கற்றேன் வாழ்வின் சட்டம்
சாதிக்கவே பிறந்தேன் தெய்வத்தின் திட்டம்

அன்பு கவி
கணேஷ்
#################################################################################




நடிப்பு இல்லை ...

மனைவியின் தினசரி குமுறல்களுக்கு பதில் ஏதும் பேசாமல்
ஆமாம் சாமி போடும் கணவன்

அலுவலகத்தில் எவ்வளவு வேலை வந்தாலும் ஏற்றுகொள்ள தயாராக
இருந்தும் சக தொழிலாளியிடம் அன்பாக பேசுவது

காதலிக்கும் போது கல்யாண விழாவில் மது அருந்தவில்லை என்று கஷ்டப்பட்டு நிருபிக்கும் காதலன்

மாமனாரின் வீட்டில் தலை தீவாளிக்கு அன்பளிப்பு  ஏதும் வேண்டாம்
என்று காட்டிகொள்ளும்  அன்பான மருமகன்

மாமியாரிடம் நடந்த சண்டையை கணவனிடம் ஏதும் நடக்கவில்லை போல சிரித்து கொண்டே சாப்பாடு பரிமாறும் மனைவி

நண்பர்களோடு படிக்க சென்று தலைவனின் படத்தை பார்க்கமுடியாமல் நடுராத்திரியில் வீடு திரும்பும் மாணவன்

கல்லூரியில் படிக்கும் போது சக தோழியிடம் தன் காதலை சொல்ல முடியாமல் நான் என்றும் உன்னுடைய நண்பன்

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நம் தொகுதி பக்கம் வந்து அணைத்து வசதிகளும் இருக்கா  என்று சரிபார்க்கும் அரசியல்வாதி

இவை அனைத்தும் நடிப்பு
என்று நினைப்பது சிரிப்பு
காண்பதெல்லாம் பொய்யே என்று அறியவில்லை சிலருக்கு
இவை எல்லாம் தன்னடக்கம் என்று புரியவில்லை பலபேருக்கு

அன்பு கவி
கணேஷ்
#################################################################################
கண்டிப்பாக ...

கல்லும் கரையும் உனக்கு
வாழ்ந்து பார்க்கணும் மற்றவருக்கு

அவநம்பிக்கை வேண்டாம் இன்று
தன்னம்பிக்கை இருந்தால் நன்று

கைகால்கள் போகும் சுற்றி
மனம் போகணும் வெற்றி

கவிதையில்  சொல்ல வேண்டுமா கண்ணா
வாழ்கையில் வெல்ல வேண்டுமே மன்னா

மெதுவாக செயல்பட வேண்டாம் இக்கணம்
வேகமாக சாதிப்போம் இலக்கணம்

வாழ்க்கையில் முன்னேறும் போது வேண்டாம் பேதம்
தன்னம்பிக்கையில் முன்னேறி காட்டுவோம் சபதம்

சொல்லாமல் செய்து காட்டுவோம் நன்னாளுக்காக
சரித்திரத்தில் நின்று காட்டுவோம் வாழ்நாளுக்காக

காலம் காத்திருக்கட்டும்  உனக்காக
காலமெல்லாம் காத்திருக்க வைக்கவேண்டும்  நமக்காக

அறிவிலே தோன்றியது போதனை
கருவிலே முடிவானது நம் சாதனை

உச்சியை அடையலாம் உன்னிப்பாக
காலத்தை வெல்லலாம் கண்டிப்பாக

அன்பு கவி
கணேஷ்